தண்ணீர் தொட்டியில் ஏறி பெண் விபரீத முயற்சி

71பார்த்தது
தண்ணீர் தொட்டியில் ஏறி பெண் விபரீத முயற்சி
ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனது புகாரை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல விபரீத முயற்சியில் ஈடுபட்டார். தன்னை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அந்த பெண் தண்ணீர் தொட்டியில் ஏறினார். அந்த பெண்ணின் கூற்றுப்படி, ஒரு மாதத்திற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக புகார் அளித்தார். ஆனால் புகாரின் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. தற்போது அவரது புகாரின் அடிப்படையில், ஐபிசியின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை கூடிய விரைவில் பிடிப்போம் என பாதிக்கப்பட்ட பெண்ணிடம் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி