சுற்றுலா வேன் கவிழ்ந்து 4 பேர் பலி

76589பார்த்தது
சுற்றுலா வேன் கவிழ்ந்து 4 பேர் பலி
கேரளாவின் மூணாறு அருகே அனக்குளம் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து தந்தை, அவரது ஒரு வயது மகன் உட்பட தமிழக சுற்றுலா பயணியர் 4 பேர் பலியாயினர். திருநெல்வேலியில் இருந்து மூணாறு சுற்றுலா சென்றவர்கள் பயணித்த வேன் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. வேனில் குழந்தைகள் உட்பட 14 பேர் இருந்தனர். போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்புடைய செய்தி