துருக்கியில் ஜனவரி 13 ஆம் தேதி, தாய் நாய் ஒன்று தனது நாய்க்குட்டியை அவசரமாக அங்குள்ள பெய்லிக்டுசு ஆல்ஃபா கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது. குட்டியை வாயில் கவ்விக்கொண்டு நாய் சென்ற சம்பவம் அனைவரிடமும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சியானது அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த குட்டி நாயானது முதலில் மயக்கமடைந்து காணப்படட்து. அதற்கு உடலின் ஹீட் குறைந்த காரணத்தினால் மயக்கமடைந்ததாக சிகிச்சையளித்து மருத்துவர் கூறியுள்ளார்.