ராமதாசை மறைமுகமாக விமர்சித்த திமுக எம்.பி.,

61பார்த்தது
ராமதாசை மறைமுகமாக விமர்சித்த திமுக எம்.பி.,
நேற்று வரை அதிமுகவிடம் கூட்டணி பேச்சு வார்த்தையில் இருந்த பாமக திடீரென பாஜகவுடன் இரவோடு இரவாக கூட்டணி வைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மறைமுகமாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை தர்மபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், வகிக்கும் மாநிலங்களவை பதவி ஓர் கட்சியிடம் பெற்றது. கூட்டணி அமைப்பது இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சியிடம், ரொம்ப நல்லா இருக்கு சார்... உங்களையே நம்பி இருக்கும் தொண்டர்களுக்கு அளிக்கும் மரியாதை இது தானா... என்னங்க சார் உங்க சட்டம்... யார் எப்படி போனா என்ன, நம்ம குடும்பம் நல்லா இருக்கணும் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி