‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

84பார்த்தது
‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்
‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 09) தொடங்கி வைக்கிறார். அரசுப் பள்ளிகளில் படித்து உயர்க்கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுககு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்திற்காக அரசு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 3,28,000 மாணவர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி