டெல்லியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவனின் பையில் துப்பாக்கி இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொம்மை துப்பாக்கி என நினைத்து அதை எடுத்துவந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக தாய்க்கு தகவல் தெரிவித்து, துப்பாக்கியை போலீசிடம் ஒப்படைத்துள்ளது பள்ளி நிர்வாகம். இது சிறுவனின் தந்தை வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி என்பதும், அவரது தந்தை சமீபத்தில் உயிரிழந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.