புல்லட் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை

82பார்த்தது
புல்லட் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை
சின்னத்திரையில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை பவித்ரலக்‌ஷ்மி. பிறகு தமிழில் ‘நாய் சேகர்’ என்ற படத்திலும் மலையாளத்தில் ‘உல்லாசம்’ என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்தார். இப்படியான சூழ்நிலையில்தான் பவித்ரா புல்லட் ஓட்ட வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி உள்ளார். இந்த வீடியோவைத் தனது சமூகவலைதளப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டி இருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் சென்னை போக்குவரத்து காவல்துறையை டேக் செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி கமென்ட் செய்து வந்தனர்.

தொடர்புடைய செய்தி