தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கன்வென்சன் சென்டரில் நடைபெற்று வரும் நிலையில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் கட்சியின் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது, சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பான ஆய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.