தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (மார்ச். 28) சென்னை திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கன்வென்சன் சென்டரில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் தவெக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இந்த நிலையில் தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜயின் பெற்றோர்களான ஏஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர்.