2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 23% வாக்குகளை பெறும் என சாணக்யா டிவி கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா டிவி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 3000-க்கும் மேற்பட்டோரிடம் நடத்திய கருத்துக்கணிப்பில், ஆளும் திமுக - 31%, அதிமுக - 23%, தவெக - 23%, பாஜக - 18% மற்றும் நாதக - 5% வாக்குகளையும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.