தமிழக வெற்றிக் கழக கொடி விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “விஜய் தொடங்கிய கட்சிக் கொடியில் என்ன சர்ச்சை இருக்கிறது?. யானை தனி மனிதனுக்கோ, கட்சிக்கோ சொந்தமா?. யானையை கட்சிக் கொடியில் வைக்க உரிமை இல்லையா?. எங்களுடைய மரபு யானைப் படை வைத்து, போரில் வென்று வெற்றி வாகை மலரை சூடுவது, புறநானூறு படித்தால் தெரியும். தமிழர் பண்பாட்டு மரபுப்படி கொடியை வடிவமைத்ததை பாராட்ட வேண்டும்” என்றார்.