"நாயகன்"-க்கு பின் நடிகர் கமலும் மணிரத்னமும் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளதால், அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. படத்தில் சிம்புவும் நடித்திருப்பது கூடுதல் பலம் சேர்த்துள்ளது. படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. தற்போது படத்தின் புது போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கமல் மற்று சிம்புவின் ஆக்ரோஷமான புகைப்படங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.