ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய கரக தீமிதி பால்குடம் திருவிழா

74பார்த்தது
சுவாமிமலை காளியம்மன் கோவில் தெருவில் எழுந்தரி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய கரக தீமிதி 36 ஆம் ஆண்டு பால்குடம் மஞ்சள் நீர் விளையாட்டு திருவிழா கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி மாலை வாஸ்து ஹோமமும் அம்பாளுக்கு திருக்காப்பு கட்டி விழா துவங்கியது அதனைத் தொடர்ந்து காசி விசுவநாதர் ஆலயத்தில் இருந்து பூத்தட்டு புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஆலயம் வந்தடைந்தது பூச்செரிதல் விழாநடைபெற்றது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதனை தொடர்ந்து நேற்று காலை ஊரணி பொங்கல் வைக்கும் வைபவமும் பகல் தீபாராதனை மற்றும் பிரசாத வழங்க நிகழ்ச்சியில் நடைபெற்றது அதனை தொடர்ந்து நேற்று மாலை அம்பாள் ஆலயத்திலிருந்து காவேரிக்கு புறப்பட்டு இரவு 9 மணி அளவில் அம்பாளுடன் சக்தி கரகம் காவிரிந்து புறப்பட்டு சுவாமிமலை வீதி உலா வந்து இரவு சக்தி கிரகம் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது அதன் பிறகு கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினார்கள் இந்த விழா ஏற்பாடுகளைஆலய நிர்வாகிகள் மற்றும் தெரு வாசிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி