கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக தன்னார்வமாக இந்தக் குழுவில் பயணித்து வரும் அனைவருக்கும் காலை வணக்கம். நாளை வெள்ளிக்கிழமை 26 ஆம் தேதி கும்பகோணம் நம்ம காவேரி தூய்மைக் குழு சார்பாக ஒரு மாபெரும் தூய்மை பணி செய்கிறோம் இதில் 300 நாட்டு நலத்திட்ட மாணவ மாணவிகள் அரசு மகளீர் கல்லூரி, அரசு ஆண்கள் கல்லூரி, இதயா கல்லூரி யில் இருந்தும், 150 மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் ஐந்து படித்துறைகளை உள்ளடக்கி ஐந்து குழுவாக பிரித்துள்ளோம். இவர்களுடன் இணைந்து நமது தன்னார்வலர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படித்துறையிலும் நான்கு தன்னார்வர்கள் வீதம் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தூய்மை பணிக்கு வரும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தேவையான மாஸ்க், கிளவுஸ், தொப்பி, சாக்கு பைகள் கொடுக்கவும் மேலும் தேநீர், வடை, குடிநீர், உணவு பொருட்களை வழங்கவும் அவர்களது பெயர் விபரம் பெறவும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. காலை 9. 00 மணி முதல் 12 மணி வரை இவர்கள் சாக்கு பைகளில் சேகரித்த கண்ணாடிகள், பாட்டில், பிளாஸ்டிக் பைகள் படித்துறையில் வைத்த பின் 12 க்கு மேல் வரும் தூய்மைப் பணியாளர்கள் அவற்றை அகற்றவும், நம்மால் எடுக்க முடியாத இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றிச் செல்வார்கள்.