முகமூடி அணிந்த நபர்கள் பட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளை

77பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, புளியம்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள புவனேஸ்வரி நகரில் வசித்து வரும் உதயச்சந்திரன். இவர் வெளிநாட்டில் ஓட்டுநராக உள்ளார். இவருக்கு திருமணமாகி வேம்பு, என்ற மனைவியும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று மாலை 4 மணியளவில் சொகுசு காரில், 3 முகமூடி அணிந்தும் 2 பேர் முகமூடி, அணியாமலும் மொத்தம் 5 பேர் கத்தி, அரிவாள், உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே வந்து வேம்புவை கட்டிப்போட்டு கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின், உட்பட 10 பவுன் நகை, கையில் அணிந்திருந்த மோதிரம், இதை தடுக்க வந்த வேம்புவின் கணவர் உதயசந்திரனை ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த மூன்று பவுன் ஜெயின், மோதிரம், மற்றும் வீட்டில் வைத்திருந்த ரொக்க பணம் 13, 500 வெள்ளி பொருட்கள் ஐபோன் மற்றும் செல்போனகளை பறித்து சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவிடைமருதூர் காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆயுதங்களால் தாக்கப்பட்ட உதயச்சந்திரன் மற்றும் வேம்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டபகலில் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியள்ளது. தொடர்ந்து தஞ்சையில் இருந்து மோப்ப நாய், மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து காவல்துறையினர் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி