OnePlus அதன் Nord CE3 Lite 5G ஸ்மார்ட்போனின் விலையை கணிசமாகக் குறைத்துள்ளது. அறிமுகத்தின் போது, 8ஜிபி ரேம்/128ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.19,999, அதே சமயம் 256ஜிபி சேமிப்பு மாறுபாடு ரூ.21,999. தற்போது அந்த விலை குறைக்கப்பட்டுள்ளது. தள்ளுபடிக்குப் பிறகு, ரூ.17,999 மற்றும் 256 ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.19,999 ஆகக் குறைந்துள்ளது. இந்த மாதம் பண்டிகைகள் ஏதும் இல்லாத நிலையில், இந்த திடீர் விலைக்குறைப்பு வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்துள்ளது.