'ராகுல் காந்தி பரோட்டா சாப்பிடத்தான் கேரளா வருகிறார்'

42028பார்த்தது
'ராகுல் காந்தி பரோட்டா சாப்பிடத்தான் கேரளா வருகிறார்'
வயநாடு எம்.பி. ராகுல் காந்தி பரோட்டா சாப்பிட மட்டுமே தனது தொகுதிக்கு வருவதாக பாஜக கேரள மாநில தலைவர் கே.சுரேந்திரன் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சுரேந்திரன், 'வயநாடு மக்களின் எந்த பிரச்சனையையும் ராகுலால் கையாள முடியவில்லை. இந்த எம்.பி.,யை சுமக்கும் அவல நிலை கேரளாவில் உள்ளது. ராகுல் காந்தி போன்றவர்களை சுமக்க மலையாளிகள் தயாரானால் அது சாபக்கேடு. வயநாட்டு மக்கள் ராகுலை ராமநாட்டுக்கரை, அடிவாரத்துக்கு வந்து பரோட்டா சாப்பிட வேண்டும் என்று தேர்ந்தெடுக்கவில்லை. எம்.பி., என்ற முறையில் அவர் படுதோல்வி அடைந்தவர்' என சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி