அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!

55பார்த்தது
அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!
2024 மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கு இன்று முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்குகிறது. அதிமுக விருப்ப மனுவை இன்று முதல் வரும் மார்ச் 1ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இந்த மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். விருப்ப மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு, தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மனுக்களை உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி