நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்.

85பார்த்தது
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டக்குழு கூட்டம் கும்பகோணம் தனியார் கூட்ட அரங்கில் மாவட்டக்குழு உறுப்பினர் கோ. மணிமூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது. மாநில நிர்வாக குழு முடிவுகளை விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வை. சிவபுண்ணியம் உரையாற்றினார். மாவட்டத்தில் நடந்துள்ள அரசியல் பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் மு. அ. பாரதி அறிக்கை முன்வைத்தார்.

கூட்டத்தில் ஏஐடியூசி மாநில செயலாளர் இரா. தில்லைவனம், கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் ஏ. ராஜேந்திரன் மாவட்ட நிர்வாகிகள் ஏ. ஜி. பாலன், தங்க. சக்கரவர்த்தி, டி. ஆர். குமரப்பா, ஏ. எம். இராமலிங்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் க. சுந்தர்ராஜன், மாதர் சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் சரண்யா உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாக மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, பட்டா உள்ளிட்ட ஆவணங்களுடன் குடியிருந்து வரும் ஏழை எளிய மக்களை நீர்நிலையில் குடியிருப்பதாக சொல்லி மின்சாரத்தை துண்டிக்கப் போவதாக அச்சுறுத்தி குடியிருப்பு இடத்தை விட்டு வெளியேற்ற முயற்சிக்கும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி