விளையாட்டுதுறையில் சிறப்பிடம்பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

56பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் வளைய பேட்டை ஊராட்சியில் விளையாட்டுத்துறையில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வளையப்பேட்டை ஊராட்சி கிராமசபை கூட்டம் தலைவர் டி. கே. ராஜா தலைமையில் நடைபெற்றது.

அண்மையில் நேபாள நாட்டில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் முன்முறை தாண்டுதல் போட்டியில் அம்மாபேட்டை ஆர். சிவபிரகாஷ் தங்கப் பதக்கம் வென்றார்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் பகல்காமில் நடைபெற்ற சர்வதேச மற்றும் தேசிய அளவிலான மகளிர்க்கான பிரிவில் உறைவாள் போட்டியில் மேலச்சத்திரத்தைச் சேர்ந்த அமிர்த லட்சுமி 2 வெள்ளிப் பதக்கங்களை
வென்றார். கோயமுத்தூரில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் அம்மாபேட்டை கீழத்தெருவை பி. கியான்ஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இவர்கள் மூன்று பேர்களுக்கும் கிராமசபை கூட்டத்தில் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கப்பட்டது. துணைத் தலைவர் எம். கேசவன் நன்றி கூறினார்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி