திருவையாறு ஐயாறப்பர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணி துவக்க விழா தருமை ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
திருப்பணி துவக்க விழா நேற்று முன்தினம் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் மஹா கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி பிரவேசபலி ரக்ஷ்க்ஷோஹன ஹோமம் பரிவார விமானங்கள் கலாகர்ஷணமும் மாலை இராஜ கோபுர கலாகர்ஷணம் முதல் கால யாகசாலை பூஜைகள் ஹோமம் திரவ்யா ஹ_தி பூர்னாஹ_தி தீபாராதனை நடைபெற்றது.
நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், ஹோமம் திரவ்யஹ_தி பூர்ணாஹ_தி தீபாராதனை யாத்ராதானம் கிரஹப்ரீதி முடிந்து கடம் புறப்பட்டு காலை 9. 30 மணிக்கு இராஜகோபுரம் பரிவார அனைத்து விமானம் திருப்பணி விமான கோபுர திருவுருவ படங்களுக்கு சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் திருப்பணி அடிக்கல் நாட்டுவதற்கான செங்கல் எடுத்து ஐயாறப்பர் சந்நிதி வலம் வந்து கன்னி மூலையில் தருமை ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அடிக்கல் எடுத்து வைத்து கோவில் திருப்பணியை துவக்கி வைத்தார்.