ஆடிப்பூர பெருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது

75பார்த்தது
ஆடிப்பூர பெருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது
திருவையாறு திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினம் மடத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி உடனுறை ஐய்யாறப்பர் திருக்கோவிலில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி முன்பு நந்தி பகவான் உருவம்வரரைந்த கொடிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தி மகா தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மங்கள வாத்யங்கள் இசை முழங்க நான்கு வீதிகள் வலம் அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்திற்கு எடுத்துவரப்பட்டது விநாயகர், சண்டிகேஸ்வரர், அம்மன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் தனித்தனி சப்பரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். இதனை தொடர்ந்து. கொடி மரத்திற்கு விபூதி, திரவிய பொடி, மஞ்சள்பொடி. இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனைகள் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசையுடன் ஆடிபூர பெருவிழா கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் ஆடிபூர விழாவில் ஒவ்வொரு நாளும் காலை பல்லக்கு, இரவு சிறப்பு வாகனத்தில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்தல் நடைபெறும். முக்கிய திருவிழாவான திருத்தேரோட்டம் வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி