திருவையாறு அடுத்த காட்டுக்கோட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதாசிவம் மனைவி முருகசெல்வி(55) இவர் குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்துவருகிறார். வீடு இடவசதி இல்லாதாதால் இவர் வீட்டிற்கு பின்புறம் ஒரு கூரை வீடு போட்டுள்ளார். அதில் பாத்திரங்கள் வைத்து பயன்படுத்திவருகிறார். நேற்று மின் கசிவால் எதிர்பாரவிதமாக கூரை வீடு தீ பிடித்து எரிந்தது. இது சம்மந்தமாக திருவையாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தினால் வீட்டிலிருந்து பாத்திரங்கள், ஆவணங்கள், துணிகள் உள்பட சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.