அரசு உயர் நிலைப் பள்ளி ஆண்டு விழா

57பார்த்தது
அரசு உயர் நிலைப் பள்ளி ஆண்டு விழா
திருக்காட்டுப் பள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ளது. 252 மாணவ, மாணவிகள் பயிலும் இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழிக்கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளி தொடர்ந்து 6 முறை 10ம் வகுப்பில் தேர்வில் 100 சதவிகிதம் மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். தொடர்ந்து அடுத்த வருடமும் 100 சதவிதம் தேர்ச்சி பெற முழு முனைப்புடன் ஆசிரியர், ஆசிரியர்கள் பயிற்றுவித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் கிராமப்புறத்திலிருந்து வந்து படித்து செல்கின்றனர். முன்னதாக இப்பள்ளியில் நேற்று நடந்த ஆண்டு விழாவில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மருதவாணன் தலைமை வகித்தார். பள்ளியின் ஓவிய ஆசிரியர் அன்புராஜா அனைவரையும் வரவேற்றார். பள்ளி ஆசிரியை வனஜா ஆண்டறிக்கை வாசித்தார். ஆண்டு விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் மெய்யழகன், பள்ளி மேலான்மை குழுத்தலைவர் தவமணி, திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன்,   அக்னீஸ்வரர் லயன் சங்கமா வட்ட தலைவர் ஜெயராமன், நகரசெயலாளர் ஜெயராமன், லயன் ஜெயக்குமார், சுப்புராமசாமி, தீயணைப்புத்துறை அலுவலர் புருசோத்தமன், கவுன்சிலர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :