விவசாயிகள் குறை கேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம்

60பார்த்தது
பூதலூரில் தஞ்சாவூர் கலால் உதவி ஆணையர் மற்றும் ஜமாபந்தி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் சரிவர தூர்வாரப்படாமல் இருக்கிறது, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். பூதலூர் வட்டத்தில் நில அளவர் பணியிடம் முழுமையாக நிரப்பப்படாமல், பெரும்பாலான பணிகள் நிலுவையில் உள்ளன. உடனடியாக நில அளவர்களை நியமிக்க வேண்டும். வளம்பகுடி, புதுக்குடி பஸ்ஸாண்டுகளில் அரசு பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை  செங்கிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மீண்டும் பழுதடைந்துள்ளது. போர்க்கால அடிப்படையில் அதனை சீர்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் தாசில்தார் மரிய ஜோசப், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஜானகிராமன் முன்னிலை வகித்தனர். செங்கிப்பட்டி சரக ஆர்ஐ ஜெயபாரதி, முன்னோடி  விவசாயிகள் அம்மையகரம்  ரவிச்சந்தர், நாகாச்சி கோவிந்தராஜ், பூதலூர் தெற்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் பாஸ்கர் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி