சைவத்தை குறிக்கும் பச்சை நிற குறியீட்டுடன் விற்கப்படும் பதஞ்சலி நிறுவனத்தின் பல் பொடியில் அசைவ பொருள் சேர்க்கப்படுவதாக வழக்கறிஞர் யதின் சர்மா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். Sepia Officinalis எனும் கணவாய் மீன் சேர்க்கப்படுவதாக பல்பொடி டப்பாவின் Ingredients-ல் குறிப்பிட்டுள்ள நிலையில், சைவம் என போலியாக விளம்பரப்படுத்துவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, பாபா ராம்தேவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.