கலப்பட விதை நெல்லால் பாதிக்கப்பட்ட வயலில் வேளாண்துறை ஆய்வு

62பார்த்தது
கலப்பட விதை நெல்லால் பாதிக்கப்பட்ட வயலில் வேளாண்துறை ஆய்வு
திருவையாறு அருகே உள்ள விளாங்குடியைச் சேர்ந்த விவசாயி திருஞானம் இவர் திருப்பூந்துருத்தி வேளாண்மை விரிவாக்க மையத்தில் கோ 51 ரக விதை நெல் 150 கிலோ வாங்கி ஐந்து ஏக்கரில் நடவு செய்தார். இந்த நெற்பயிர் தற்போது பாதி அளவில் கதிர் விடத் தொடங்கியுள்ளது. இதையடுத்து விதை நெல்லில் கலப்படம் இருப்பதாக பாதிக்கப்பட்ட நெற்பயிருடன் தஞ்சாவூர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்திடம் விவசாயி திருஞானம் முறையிட்டார். இதையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட வயலை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயசீலன், விதை சான்று உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், திருவையாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் லதா, விதை ஆய்வாளர் சத்யா, விதை சான்று அலுவலர் மணிமேகலை ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயியிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். பின்னர் வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், வேளாண்மை விரிவாக்க மையத்தில் வாங்கிய விதை நெல்லுடன் தனியார் உரக்கடையில் வாங்கிய 30 கிலோ விதை நெல்லையும் சேர்த்து விவசாயி நாற்று விட்டுள்ளார். குறுகிய கால ரகமான கோ 51ஐ 18 முதல் 22 நாட்களுக்குள் நடவு செய்ய வேண்டும். இவர் 32 நாட்களில் நடவு செய்துள்ளார். வயதான நாற்றுகளை நடவு செய்ததாலும், நீர் மேலாண்மை இல்லாமையாலும், காலநிலை காரணமாகவும் ஒன்று, இரண்டு கதிர்கள் வெளிவந்துள்ளன. பிறரக கலப்பு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி