தஞ்சாவூரில் மரக்கிளை முறிந்து தொழிலாளி பலி

72பார்த்தது
தஞ்சாவூரில் மரக்கிளை முறிந்து தொழிலாளி பலி
தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் (55). இவர் வண்ணாரப்பேட்டை நடுத்தெருவில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவரின் மகன் தமிழரசன் (30) வீட்டில் மாமரத்தை வெட்டுவதற்கு கூலி வேலைக்காகச் சென்றார். 

மரம் வெட்டிக் கொண்டிருக்கும்போது தவறுதலாக மரக்கிளை முறிந்து கனகராஜ் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த கனகராஜை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகராஜ் இறந்தார். இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி