இலங்கை அதிபரின் போக்கில் மாற்றம் இருக்காது: நெடுமாறன்

60பார்த்தது
இலங்கை அதிபரின் போக்கில் மாற்றம் இருக்காது: நெடுமாறன்
தஞ்சாவூர் விளார் சாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றம் சார்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற  ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய, "விலங்கை உடைத்து" நூல் அறிமுக விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

இலங்கையின் புதிய குடியரசுத் தலைவராக திசநாயக பொறுப்பேற்றுள்ளார். அவர் சார்ந்த ஜெ. வி. பி. இயக்கம் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் எதிரான இயக்கமாக கடந்த காலத்தில் திகழ்ந்தது. இனி அவர் என்ன செய்யப் போகிறார் என்பதுதான் கேள்வி" என்றார்.

விழாவுக்கு பேராசிரியர் வி. பாரி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிர்வாகி சி. மகேந்திரன் நூலை அறிமுகம் செய்து பேசினார். உலகத்தமிழர் பேரமைப்பின் நிர்வாகிகள் சா. இராமன், டி. சி. எஸ். தெட்சிணாமூர்த்தி, எஸ். டி. மனோகரன் ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர். பேராசிரியர் பெ. இராமலிங்கம், வழக்குரைஞர்கள் த. பானுமதி, அ. நல்லதுரை, பொறியாளர் ஜோ. கென்னடி ஆகியோர் திறனாய்வு உரையாற்றினர். பழ. நெடுமாறன் சிறப்புரையும், காசி ஆனந்தன் ஏற்புரையாற்றினர். முள்ளிவாய்க்கால் முற்ற நிர்வாகிகள் துரை. குபேந்திரன், சு. பழனிராஜன், பா. செல்வபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி