தஞ்சாவூர் கருத்தரங்கக் கூடம் காவல் இயக்குநர் திறந்து வைப்பு

79பார்த்தது
தஞ்சாவூர் கருத்தரங்கக் கூடம் காவல் இயக்குநர் திறந்து வைப்பு
தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவலகத்தில் கருத்தரங்கக் கூடத்தைக் காவல் துறை இயக்குநர் சங்கர் ஜிவால் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புதிதாக கருத்தரங்கக் கூடம் கட்டப்பட்டுள்ளது. இதைத் தமிழ்நாடு காவல் இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். பின்னர், மத்திய மண்டல காவல் தலைவர் க. கார்த்திகேயன், தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜியாஉல் ஹக், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆஷிஷ் ராவத் (தஞ்சாவூர்), சீ. ஜெயக்குமார் (திருவாரூர்), ஹர்ஷ் சிங் (நாகை), கே. மீனா (மயிலாடுதுறை) ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இதையடுத்து, காவல் துறை அமைச்சுப் பணியாளர்களிடம் காவல் இயக்குநர் பேசுகையில், "கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் அவர்.
முன்னதாக, அலுவலக வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார்.  


இந்நிகழ்வில், உதவி காவல் தலைவர்கள் (தலைமையிடம்) ஸ்ரீநாதா, பாலாஜி, தஞ்சாவூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் மணிவேல், உதவி ஆய்வாளர்கள் பிச்சைமுத்து கண்ணன், சக்திவேல், ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி