மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாநில ஓய்வூதியர் அரங்கம், தஞ்சாவூர் கிளை மாநாடு, ஞாயிற்றுக்கிழமை ச. வீரமணி இல்லத்தில் நடந்தது. ஆர். தமிழ்மணி தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை பாலசுப்ரமணியம் வாசித்தார். ராஜாராமன் வரவேற்றார். கிளைச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் மாநாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் துவக்கவுரை ஆற்றினார். அறிக்கையின் மீது விவாதத்தை முன் வைத்தனர். தொகுப்புரைக்கு பிறகு அறிக்கை ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆர். பன்னீர்செல்வம் கிளைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இக்கிளை மாநாட்டில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து, பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, முனிசிபல் காலனி வழியாக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இயங்கி வந்து நிறுத்தப்பட்டுள்ள 6BA நகரப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும். முனிசிபல் காலனி, தங்கம் நகர், முத்தமிழ் நகர் பகுதிகளில் குப்பைகளை காலி மனைகளில் கொட்டுவதை தடுக்க வேண்டும். முனிசிபல் காலனி, தங்கம் நகர், முத்தமிழ் நகர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்" என தீர்மானங்கள் இயற்றப்பட்டன. பி. சத்தியநாதன் நிறைவுரை ஆற்றினார். ச. வீரமணி நன்றி கூறினார்.