ஒரத்தநாடு காவல் கண்காணிப்பாளர் உட்கோட்ட பகுதிகளில், மின்சார ஒயர்கள் மற்றும் கோயில் உண்டியல்களில் திருடியவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ஒரத்தநாடு காவல் கண்காணிப்பாளர் உட்கோட்ட பகுதிகளில், மின்சார ஒயர்கள் மற்றும் கோயில் உண்டியல்களில் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்படி வாட்டாத்திக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் சாம்சன் லியோ, தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் குமாரவேல், ராஜா, தர்மலிங்கம், ஜெகன், சின்னத்துரை, மணிகண்டன் ஆகியோர் கொண்ட தனிப் படை போலீசார் தீவிரமாக தேடினர். ஓரத்தநாடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து சந்தேகத்தின்பேரில் ஒருவரை மடக்கிப்பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் மதுரை மாவட்டம் சம்பட்டிப்புரம், பாரதியார் நகர் 2-ம் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (38) என்பது
தெரியவந்தது. ஒரத்தநாடு, திருவோணம், பாப்பநாடு உள்ளிட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 13 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரிடம் இருந்து சுமார் 12 கிலோ காப்பர் கம்பி, உண்டியலில் திருடிய பணம் மற்றும் சில்லறை காசுகள் திருட பயன்படுத்திய கட்டர். திருப்புளி போன்ற ஆயுதங்களை கைப்பற்றினர். மேலும் ராமகிருஷ்ணன் மீது பாப்பாநாடு சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா, வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.