தஞ்சாவூர் - சென்னை இடையே பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து புது தில்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்து வலியுறுத்தியது குறித்து வெள்ளிக்கிழமை கூறியது:
தஞ்சாவூர் - சென்னை இடையே பகல் நேர இரயில் இயக்க வேண்டும். பட்டுக்கோட்டை பேராவூரணி வழியாக கம்பன் ரயிலை வாரத்தின் 7 நாள்களும் இயக்க வேண்டும். திருச்சி - ஹௌரா, திருச்சி -பாலக்காடு, திருச்சி - திருவனந்தபுரம் ரயில்களை தஞ்சாவூர் வரை நீட்டிக்க வேண்டும். தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை - அரியலூர், தஞ்சாவூர் -புதுக்கோட்டை மன்னார்குடி - பட்டுக்கோட்டை ஆகிய புதிய ரயில் வழித்தடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சார்மினார் ரயிலை கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக இயக்க வேண்டும். தாம்பரம் - செங்கோட்டை ரயில் அதிராம்பட்டினம் பேராவூரணியில் நிறுத்தம் செய்ய வேண்டும். செந்தூர் ரயிலை பூதலூரில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினேன்" என்றார்.