சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நடைபெறும் வகையில் போலீஸ் கமிஷ்னர்கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், மெரினா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலை இன்று (டிச.31) இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மூடப்படுகிறது. மேலும், இரவு 10 மணி முதல் அனைத்து மேம்பாலங்களும் மூடப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. பாதுகாப்பு பணிக்காக சுமார் 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.