பறக்கும்படை சோதனை நீடிக்கும் அறிவிப்பை பரிசீலிக்க கோரிக்கை

81பார்த்தது
பறக்கும்படை சோதனை நீடிக்கும் அறிவிப்பை பரிசீலிக்க கோரிக்கை
தேர்தலுக்கு பின்னும்
பறக்கும்படை சோதனை நீடிக்கும் அறிவிப்பை பரிசீலிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணை தலைவர் தென்னரசு மாநில தேர்தல் ஆணையருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:

இந்திய திருநாட்டின் 2024ம் ஆண்டுக்கான நாடாளு மன்ற தேர்தல் வரும் 19ம் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கு சாதகமாக வாக்கு சேகரிக்க வாக்காளர்களுக்கு கையூட்டு மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் விதமாக பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களை அமைத்து வாகன சோதனை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையர் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை நிலை குழு மற்றும் பறக்கும் படை வாகனச் சோதனை நடைபெறும் என்று அறிவித்திருப்பதை வர்த்தகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தல் ஆணையர் எடுத்துள்ள இந்த நிலைப்பாட்டினை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி