கும்மி அடித்து வாக்கு சேகரித்த ராதிகா சரத்குமார்

60பார்த்தது
விருதுநகர் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ராதிகா சரத்குமார், சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அணைக்கரைப்பட்டி, அம்மாபட்டி, புதுசுரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராதிகா சரத்குமார், அதிமுக, தேமுதிக கூட்டணி கட்சியினர் யாரை பிரதமராகுவது என்ற குழப்பத்தில் உள்ளனர். அதனால் அனைவரும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார். இதையடுத்து புதுச் சூரங்குடி கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராதிகா, அப்பகுதியில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பெண்களுடன் கும்மியடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி