தஞ்சை தாமரை பன்னாட்டு பள்ளியில் 16-வது தொடக்க நிலை விளையாட்டு விழா நடந்தது. விழாவில் பள்ளித் தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் நிர்மலா வெங்கடேசன் முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத் கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளியின் முதல்வர் விஜயா ஸ்ரீதர், நிதி நிர்வாகத் தலைவர் சுந்தர ராகவ், துணை முதல்வர் ஜெய கணேஷ், இடைநிலை ஒருங்கிணைப்பாளர் சர்மிளா மற்றும் தொடக்க நிலை தலைமை ஆசிரியர் பிரவினா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கூடைப்பந்தாட்ட வீராங்கனையும் பயிற்சியாளருமான தர்ஷினி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை
ஏற்றுக்கொண்டு, மாணவர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பேசினார். ஒலிம்பிக்கை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விளையாட்டு விழா நடந்தது. விழாவில் உடற்கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர் மணி கண்டன் ஆண்டறிக்கை வாசித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கினர் முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.