திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் ஆசைத்தம்பி (55) என்பவர், ஜெராக்ஸ் மெஷினை பயன்படுத்தி கள்ளநோட்டு தயாரித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அருகே இருந்த மளிகை கடைக்குச் சென்று அந்த பணத்தை மாற்ற முயன்றுள்ளார். இதனை கவனித்த கடைக்காரர், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், கள்ள நோட்டை மாற்ற முயன்ற ஆசைத்தம்பியை கைது செய்தனர்.