இயற்கை பாதுகாவலர்களுக்கு 'காவிரித்தாய்' விருது

80பார்த்தது
இயற்கை பாதுகாவலர்களுக்கு 'காவிரித்தாய்' விருது
தஞ்சாவூரில் காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவம் சார்பில் 5 -ஆம் ஆண்டு இயற்கை பாதுகாவலர்களுக்கு 'காவிரித்தாய்' விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தார். இதில், புதுக்கோட்டை இயற்கை விவசாயி கோ. ச. தனபதி, காவிரி கள ஆய்வு ஆசிரியர் அ. வியனரசு, இளங்கலை பண்ணைத் தொழில்நுட்பம் நா. இளங்கோவன், கோவை பன்னீர்செல்வம், திருச்சி நீர் தொண்டு நிறுவனம் க. பாண்டியன் ஆகியோருக்கு 'காவிரித்தாய்' விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை துணைவேந்தர் வி. திருவள்ளுவன், மருத்துவர் ராதிகா மைக்கேல், வேளாண் துறை துணை இயக்குநர்கள் ச. ஈஸ்வர், கோ. வித்யா, இயற்கை மற்றும் வளம் குன்றா வேளாண் மைய இயக்குநர் இரா. ராமன் ஆகியோர் வழங்கினர்.

மேலும், அருமலைக்கோட்டை
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அருணாச்சல தொண்டைமானின் படத்தை வெற்றித் தமிழர்
பேரவை துணைப் பொதுச் செயலர் இரா. செழியன் திறந்து வைத்தார். காவிரித்தாய் இயற்கைவழி வேளாண் உழவர் நடுவ அறங்காவலரும், விழா ஏற்பாட்டாளருமான அரு. சீர். தங்கராசு, அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் தங்க. சண்முகசுந்தரம், வாளமர்கோட்டை இளங்கோவன், மாரனேரி இயற்கை விவசாயி பசுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி