மாவட்ட அளவிலான ஜூனியர் ரெட்கிராஸ் பயிற்சி முகாம் தஞ்சை லிட்டில் ஸ்கார்ஸ் மெட்ரிக். மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
முதன்மைக் கல்வி அலுவலர் மதன் குமார், கல்வி மாவட்ட அலுவலர் முத்தசாமி ஆகியோர் வழிகாட்டுதலின் படி பள்ளி தாளாளர் நடன சிகாமணி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். மாவட்ட ஜேஆர்சி அமைப்பாளர் பிச்சை மணி, அமைப்பாளர் கனிமொழி வரவேற்று பேசினர். மாவட்ட இணை
அமைப்பாளர் ஜேசுதாஸ் தமிழ்மாறன் வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் சாமிநாதன் பேசினார். ஐஆர்சிஎஸ் முதலுதவி பயிற்றுனர் சுரேஷ், முதலுதவி பற்றி செயல் முறை பயிற்சி அளித்தார்.
குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித்குமார், எம்ஆர் மருத்துவமனை டாக்டர் ஜோமார்செலின் உடல் நலம் குறித்து பேசினர். தனியார் பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார். ஒன்றிய அமைப்பாளர்கள், ஜேஆர்சி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.