ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை தஞ்சை உற்சாகம்

162பார்த்தது
ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை தஞ்சை உற்சாகம்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியதை வரவேற்று தஞ்சையில் மத்திய மாவட்ட திமுக சார்பில் 10 காளைகளுடன் வந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். மத்திய மாவட்ட செயலாளர் துரைசந்திரசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வம், மேயர் சண்ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட பஞ் தலைவர் உஷா, ஒன்றியக்குழுத் தலைவர் வைஜெயந்திமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் துரைஜெயக்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் மேத்தா, நீலகண்டன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி