தஞ்சாவூர் மின்வாரிய செயற்பொறியாளர் கலைவேந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் முதல் வியாழன் அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று வல்லம் ரோடு, தஞ்சாவூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணி முதல் 1 மணி வரை மேற்பார்வை பொறியாளர்- 1 நளினி தலைமையில் நடைபெறுகிறது. இதில் வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம் பூர், திருக்கானூர்பட்டி, வடக்கு தஞ்சாவூர், திருவையாறு புறநகர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி புறநகர், திருக்காட்டுப்பள்ளி நகர், நடுக்காவேரி பகுதி மின் அலுவலகங்களை சார்ந்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின் சம்மந்தமாக குறைகள் ஏதும் இருப்பின் தெரிவிக்கலாம். என்று கூறப்பட்டுள்ளது.