அடையாளம் தெரியாத பைக் மோதி முதியவர் பலி

75பார்த்தது
அடையாளம் தெரியாத பைக் மோதி முதியவர் பலி
தஞ்சை அருகே அடையாளம் தெரியாத பைக் மோதியதில் நடந்து சென்ற முதியவர் இறந்தார்.

தஞ்சாவூர் அருகே கடகடப்பை வடக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம் (70). கடந்த 26 ஆம் தேதி அதே பகுதியில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சண்முகம் சென்றார். பின்னர் தனது வீட்டிற்கு நடந்து வந்து கொண் டிருந்தார். கடகடப்பை கட் ரோட்டில் வந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத பைக் முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்த சண்முகம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைந்தனர், இதுகுறித்து தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் பைக் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி