பயிர்கடனை கால நீட்டிப்பு செய்து தர வேண்டும் - விவசாயிகள்

50பார்த்தது
பயிர்கடனை கால நீட்டிப்பு செய்து தர வேண்டும் - விவசாயிகள்
தஞ்சாவூர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில், கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள்
பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு சம்பா சாகுபடிக்கு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்கப்பட்டது. ஆனால் போதிய தண்ணீர் இல்லாததால் சாகுபடி பாதிக்கப்பட்டதால், கடனை திருப்பி செலுத்த முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த ஆண்டு அந்த பயிர்கடனை கால நீட்டிப்பு செய்து தர வேண்டும்.
விவசாய மின் இணைப்புக்கு பணம் செலுத்தியும் காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடன் மின் இணைப்பு வழங்க வேண்டும். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 2, 500 மூட்டை சர்க்கரை மழைநீரில் நனைந்து சேதமாகியது. எனவே உடனடியாக சர்க்கரை மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தால் செங்கிப்பட்டி பகுதிகளில் உள்ள 660 ஏரி, குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதுபாவாசத்திரம் அருகே மரக்காவலசை கிராமத்தை சுற்றி 7 இடங்களில் இறால் பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. உரிய அனுமதி பெறாமல் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீரை உறிஞ்சி இறால் வளர்க்க பயன்படுத்துவதால், அந்த பகுதியில் குடிநீரும், நிலத்தடி நீரும் இல்லாமல் பொதுமக்களும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தொடர்புடைய செய்தி