தஞ்சை: பொங்கல் போனஸ் கேட்டு கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

78பார்த்தது
தஞ்சை: பொங்கல் போனஸ் கேட்டு கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பொங்கல் போனஸ் வழங்க கோரி தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் நடராஜன், ஜெயபால், அல்போன்ஸ், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜேந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கட்டுமான தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக போனஸ் ரூ. 15 ஆயிரம் வழங்க கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிர்வாகிகள் சூரி, ரவிச்சந்திரன், பெட்ரிக் ஜெயக்குமார், கணபதி டாக்டர் பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை மாநில குழு உறுப்பினர் மாசிலாமணி முடித்து வைத்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி