மதுரை: கூடல் நகர் ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக நாளை (09.01.2025) காலை 10.35 முதல் மாலை 5.35 மணி வரை 9 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. மேலும், செங்கோட்டை-மயிலாடுதுறை (16848), நாகர்கோவில்-மும்பை (16352), மதுரை-பிகானிர் (22631)நாகர்கோவில்-கோவை ரயில் (16321), குருவாயூர்-எழும்பூர் (16128), கோவை-நாகர்கோவில் (16322), ஓகா-ராமேஸ்வரம் (16734), மயிலாடுதுறை-செங்கோட்டை, திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி ஆகிய 9 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.