உழவர் சந்தையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பணி அனுபவம்

1071பார்த்தது
உழவர் சந்தையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பணி அனுபவம்
தஞ்சாவூர் அருகே, ஈச்சங்கோட்டை டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் வேளாண் அனுபவப் பணியில் கடந்த இரண்டு வாரமாக உழவர்களையும் வேளாண் துறையைச் சார்ந்தவர்களையும் சந்தித்து வருகின்றனர். உழவு பணி மட்டும் இன்றி வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதலின் நுட்பத்தை அறிந்து கொள்ளும் வகையில் தஞ்சாவூர் உழவர் சந்தைக்கு சென்று வேளாண் அலுவலர் ஜெயபாலை சந்தித்து அதன் தொடக்கம் பணிகள் எவ்வாறு உள்ளன.

விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தனர். மேலும் அங்குள்ள வேளாண் விற்பனையாளர் அவர்களை சந்தித்து விற்பனை முறை மற்றும் விற்பனையில் உள்ள நிறைகுறைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் மாணவர்கள் விற்பனையாளர்களோடு சேர்ந்து வேளாண் பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனையில் ஈடுபட்டு வியாபாரம் நுணுக்கங்களை கற்றறிந்தனர்.

தொடர்புடைய செய்தி