தமிழகத்தில் பொறியியல் மாணவர்கள்
சேர்க்கையில் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 29) முதல் தொடங்குகிறது. இந்தக் கலந்தாய்வு மூன்று சுற்றுகளாக நடத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 433 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1 லட்சத்து 79, 938 இடங்கள் உள்ளன.
இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு கலந்தாய்வில் பங்கேற்க 2 லட்சத்து 9, 645 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 99, 868 பேர் கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதி பெற்றனர்.
இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூலை 10- ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து முதல்கட்டமாக முன் னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு கடந்த ஜூலை 22-இல் தொடங்கி ஜூலை 27 வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 9, 639 இடங்களில் 836 மட்டுமே நிரம்பியுள்ளன. இதில் 92 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7. 5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின. இதையடுத்து, பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு (ஜூலை 29) தொடங்கி 3 சுற்றுகளாக நடைபெறவுள்ளன. முதல் சுற்று கலந்தாய்வு ஆக. 10-ஆம் தேதி வரை நடைபெறும். கூடுதல் விவரங்களை https: //www. tne aonline. org/ எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.