தஞ்சை: பொதுமக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்

5144பார்த்தது
தஞ்சை: பொதுமக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்தில் முதல் முறையாக பொது மக்களுக்கு உதவக்கூடிய வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக மஞ்சள் பை வழங்கும் ரூ. 10 லட்சம் மதிப்பிலான முழுமையான தானியங்கி உபகரணத்தை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பொது மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தஞ்சாவூர் மாவட்டம் மட்டும் இன்றி, பிற மாவட்டங்களில் இருந்தும், சிகிச்சைக்காக உள் நோயாளிகளாகவும் புறநோயாளிகளாகவும் தின மும் சுமார் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் மஞ்சள் பைகளை பயன்படுத்திடும் வகையில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் ரூ. 10 லட்சம் மதிப்பிலான தானியங்கி உபகரணத்தை மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவர் மருத்துவர், மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி