‘குபேரா’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

84பார்த்தது
‘குபேரா’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
நடிகர் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘குபேரா’. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி